×

2300 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வந்த  அங்கன்வாடி மையங்களில், மாண்டிசோரி கல்வியை அடிப்படையாக கொண்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி கல்வியை அடிப்படையாக கொண்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஒருங்கிணைப்புடன் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை எழும்பூர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி எல்கேஜி,யுகேஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

 தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் உள்ள 52,933 குழந்தைகள் பயன்பெறும் வகையில், 32 மாவட்டங்களிலும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இந்த வகுப்புகள், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் நிர்வாக பொறுப்பிலும், முன்பருவக் கல்வி செயல்பாடுகள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையிலும் இயங்கும். அக்குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க  பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.  மேலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு,  4 இணை பள்ளிச் சீருடைகள், காலணிகள், முன்பருவக் கல்வி உபகரணங்கள் கலர் பென்சில்கள், க்ரையான்ஸ்கள், மலைப்பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு  கம்பளி சட்டை, மழைக்கால பூட்ஸ் ஆகிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். படித்து முடித்தபின் அக்குழந்தைகளுக்கு நிறைவு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : centers ,Anganwadi , Anganwadi centers, Elgji, UK classes
× RELATED மதுராந்தகம் ஒன்றியத்தில் ரூ.36...