மதுரை: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த பவானி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள சாலையோர மரங்களில் தகரம் மற்றும் அட்டையிலான விளம்பர பலகைகள் ஆணி அடித்து பதிக்கப்படுகின்றன. இதனால் மரங்கள் பட்டுப்போகும் நிலை உள்ளது. எனவே, சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் பதிக்க தடை விதித்து, மரங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், மனு குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
