×

முதல்வர் பதவிக்காக யாகம் நடத்தியதாக கூறப்படுவது உண்மையல்ல: துணை முதல்வர் பேட்டி

சென்னை: தலைமை செயலகத்தில் யாகம் ஏதும் நடத்தவில்லை என்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், யாகம் செய்வதன் மூலம் முதலமைச்சர் ஆகலாம் என்ற சக்தி இருந்தால், பிரதமர் ஆவதற்குக்கூட யாகம் நடத்தலாம் என்ற சூழல் ஏற்பட்டுவிடும் என்றார்.

புதுப்பிக்கப்பட்ட அறையில் சாமி கும்பிட்டதாக தெரிவித்த அவர், முதல்வர் பதவிக்காக யாகம் நடத்தியதாக கூறப்படுவது உண்மையல்ல என்றார். மேலும் தலைமைச் செயலகத்தில் தமது அறையில் வழக்கமான சாமி வழிபாட்டைத்தான் நடத்தியதாகவும் யாகம் எதையும் நடத்தவில்லை என்றும் துணை முதலைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். பாஜக குறித்த, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையின் கருத்துகள் குறித்து பதிலளித்த ஓ.பி.எஸ், அவரது பேச்சை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறையில் அதிகாலையில் யாகம் நடந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறை முதல்தளத்தில் உள்ளது. இந்த அறையில் சில மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதற்கான வேலைகள்  சில தினங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அவரது அறை புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஓபிஎஸ் திடீரென தலைமை செயலகத்தில் உள்ள தனது அறைக்கு சென்றார். அங்கு ஏற்கனவே, யாகத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, வேத  விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் இந்த யாகம் நடந்தது. இதில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த யாகம் முடிந்த பிறகு காலை 8.30  மணிக்கு ஓபிஎஸ் தலைமை செயலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : chief minister ,Deputy Chief Minister , chief minister, yoga, Deputy Chief Minister
× RELATED தனிநபரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கானது...