×

ஊட்டியில் நிலவும் குளு குளு காலநிலை : சுற்றுலா பயணிகள் உற்சாகம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகத்தின் முக்கியமான மலைவாச ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும்  குளு குளு காலநிலை நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஊட்டிக்கு வருவதை விரும்புகின்றனர். கோடை சீசன் காலமான ஏப்., மே மாதங்களிலும், இரண்டாவது சீசன் காலமான செப். அக். மாதங்களிலும் சுற்றுலா பயணிகள் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க வந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஊட்டியில் உறைப்பனி சீசன் காலம் என்பதால் குளு குளு காலநிலையை அனுபவிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஊட்டிக்கு வருவது வழக்கம்.  

இந்நிலையில் தற்போது ஊட்டியில் உறைப்பனி பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, பகல் நேரங்களில் வெயிலுடன் இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் ஊட்டிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊட்டி நகரில் உலா வரும் சுற்றுலா பயணிகள் யாருடைய உதவியுமின்றி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களின் வரைப்படங்களை வைத்து கொண்டு தாமாகவே சென்று பார்த்து மகிழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பழங்குடியின மக்கள் வசிக்க கூடிய கிராமங்களுக்கு சென்று அவர்களின் பாரம்பரிய, கலச்சார தகவல்களை பார்த்து ரசிக்கின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kulu , Ooty, tourists, enthusiasm
× RELATED இமாச்சலப்பிரதேச மாநிலம் குலு மணாலியில் கனமழை காரணமாக நிலச்சரிவு!