×

சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகல்

டெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகி உள்ளார். சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதை அடுத்து இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் சிபிஐ.,க்கு புதிய இயக்குனரை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம் ஜனவரி 24 ம் தேதியன்று பிரதமர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, வழக்கறிஞர் பிரசாத் பூஷண் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகி உள்ளார். மேலும் சிபிஐ புதிய இயக்குனர் தேர்வு, நியமனம் ஆகியவற்றில் வெளிப்படை தன்மை வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தானும் ஒரு உறுப்பினராக இடம் பெற்றுள்ளதாலேயே இவ்வழக்கில் இருந்து தான் விலகுவதாக விளக்கம் அளித்துள்ள ரஞ்சன் கோகாய், நாகேஸ்வரராவ் நியமனத்திற்கு எதிரான வழக்கை ஜனவரி 24 ம் தேதி வேறொரு அமர்வு விசாரிக்கும் என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranjan Kokai ,Supreme Court ,Nageswara Rao ,CBI , Supreme Court,judge Ranjan Kokai,dismisses,case ,Nageswara Rao's
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...