×

நந்தம்பாக்கத்தில் ஏலச்சீட்டு நடத்தி 15 லட்சம் மோசடி: தம்பதி கைது

ஆலந்தூர்: நந்தம்பாக்கம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (42). வாகன உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனி நடத்துகிறார். இவரது மனைவி தனலட்சுமி (40). இவரது கம்பெனியில் நஷ்டம் ஏற்பட்டதால் தம்பதி இருவரும்  கடந்த 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர்.இதில் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் ₹50 ஆயிரம், ₹1 லட்சம், ₹2 லட்சம், ₹3 லட்சம் என்ற கணக்கில் சேர்ந்துள்ளனர். இதில் 15க்கு மேற்பட்டோருக்கு கடந்த 2 ஆண்டாக ஏலப்பணத்தை தராமல் ஏமாற்றி  வந்துள்ளனர். வர்களிடம் பணம் கேட்டபோது, ₹15 லட்சத்து 30 ஆயிரத்தை விரைவில் கொடுத்து விடுவதாக கூறி சிலருக்கு காசோலையும், சிலருக்கு பத்திரமும் எழுதி கொடுத்துள்ளனர். ஆனாலும் தம்பதி பணத்தை தராமல்  இழுத்தடித்துள்ளனர்.இதையடுத்து சிவசங்கர் என்பவர் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக ரவிச்சந்திரன்-தனலட்சுமி  தம்பதியை நேற்று கைது செய்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nandambakkam , nantampakkat, 15 lakh, fraud case, arrested
× RELATED கோயில் சொத்தை பாதுகாக்காத விவகாரம்...