×

அதிமுக சார்பில் 25ம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: இபிஎஸ், ஓ.பி.எஸ்.பங்கேற்பு

சென்னை: அதிமுக சார்பில் வருகிற 25ம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் இபிஎஸ், ஓ.பி.எஸ். பங்கேற்கின்றனர்.அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25ம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டத்தில் இறந்த  மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது நமது விழுமிய கடமையாகும். அன்னைத் தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அதிமுக மாணவர் அணியின் சார்பில் வருகிற 25ம் தேதி(வெள்ளிக் கிழமை) கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத்  தலைநகரங்களிலும் “வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள்” நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கட்சியின் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள்; நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.25ம் தேதி வடசென்னை வடக்கு(கிழக்கு) மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் இ.மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்,  மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஏ.டேவிட் ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.தென் சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  மாவட்ட செயலாளர்  விருகை வி.என்.ரவி, மாவட்ட மாணவர் அணி  செயலாளர் எம்.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.






பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Vaaravana , AIADMK, Veeranakana, public meeting
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...