×

மக்கள் நீதி மய்யம் இந்து விரோத அமைப்பு: கமல் மீது எச்.ராஜா பாய்ச்சல்

சென்னை: சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் இந்துக்களை மதிக்கவில்லை என பிரதமர் மோடி சமீபத்தில் விமர்சனம் செய்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை குறைகூற கூடாது என கூறி இருந்தார். இதை பா.ஜனதாவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரது பதிவில், “சபரி மலையை பொறுத்தவரை கேரள அரசை குறை சொல்லக் கூடாதாம். உச்சநீதி மன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டுமாம். கமல்ஹாசன் கூறுகிறார். அப்படியானால் 2017-ல் பிரவம் சர்ச் குறித்த தீர்ப்பை பினராயி விஜயன் அரசு ஏன் செயல்படுத்தவில்லை என கேட்கும் துணிவு உண்டா கமலுக்கு? மொத்தத்தில் மக்கள் நீதி மய்யம் இந்து விரோத அமைப்பே” என்று கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
கமல் மீது தற்போதுதான் முதல் முறையாக எச்.ராஜா தாக்குதல் நடத்தியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kamal , People's Justice, Hindu, Kamal, H. Raja
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...