×

‘சட்ட கதிர்’ புத்தகத்தின் வெள்ளிவிழா முன்னாள் நீதிபதி லட்சுமணனுக்கு ஆளுநர் புரோகித் விருது வழங்கினார்

சென்னை: ‘சட்ட கதிர்’ தமிழ் சட்டப் புத்தகத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் “நீதி தமிழ் அறிஞர்” விருதை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். சட்டப் புத்தகங்கள் மற்றும் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் சட்ட கதிர் இதழ் கடந்த 1992ல் தொடங்கப்பட்டது. இந்த இதழில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த இதழின் வெள்ளிவிழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ‘நீதி தமிழ் அறிஞர்’ விருதை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனுக்கு ஆளுநர் வழங்கினார். நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், ஆர்.மகாதேவன், மூத்த வக்கீல் ஆர்.காந்தி, சட்டக்கதிர் இயக்குநர் வி.ஆர்.எஸ்.சம்பத் மற்றும் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாலை வெள்ளிவிழா நிறைவு நிகழ்ச்சி நடந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Governor ,Lakshmanan , 'Legal ray',book,Governor,Purohit,Silver,Award,presented,former Justice Lakshmanan
× RELATED 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!