×

கடந்த 4 ஆண்டுகளில் விலைவாசி உயர்வே மோடி ஆட்சியின் சாதனை : கொல்கத்தா கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கொல்கத்தா: விவேகானந்தருக்கு நினைவு இல்லம் கட்டிய மாநிலம் தமிழ்நாடு என்று கொல்கத்தா பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். மு.க.ஸ்டாலின் வங்க மொழியில் உரையை தொடங்கி பிறகு தமிழில் பேச ஆரம்பித்தார். கொல்கத்தா - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நம்மை இணைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். அரசியல், ஆண்மீகம், இலக்கியத்தில் தமிழகத்துக்கும் வங்கத்துக்கும் தொடர்பு உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மம்தா பானர்ஜி இரும்பு கெண்மணி என்று புகழாரம் சூட்டினார் மு.க.ஸ்டாலின். மேலும் பேசிய அவர் 2-வது சுதந்திர போராட்டத்திற்காக கொல்கத்தாவில் அனைத்து எதிர்கட்சிகளும் கூடியுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவின் ஒற்றுமையை நிலைநாட்ட ஜனநாயக போர்களத்தில் நிற்பதாகவும், கொல்கத்தா மாநாடு மேடையை இந்தியா போல் காட்சியளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். பாரதிய ஜனதா அரசை வீழ்த்த வேண்டும் என்பதே அனைவரது சிந்தனை என்று தெரிவித்த ஸ்டாலின், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தான் நம் முன்னோர்கள் கூறினார்கள் என்று கொல்கத்தா கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றினார். ஒற்றுமை நம்மிடம் இருந்தால் நிச்சயம் மோடியை தோற்கடிக்க முடியும் என்று ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார்.

எதிரியே இல்லை என்று கூறிவந்த மோடி அண்மையில் எதிர்கட்சிகளை விமர்சித்து வருவதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், நாம் ஒன்று சேர்ந்திருப்பதை கண்டு நரேந்திர மோடி பயப்படுகிறார் என்று தெரிவித்தார். பயத்தினால் ஏற்பட்ட கோபத்தால் எதிர்கட்சிகளை மோடி விமர்சித்து வருவதாகவும், நாட்டு மக்களுக்கு இடையூறு செய்வதால் மோடியை எதிர்ப்பதாக மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் தெரிவித்தார். மக்களை ஏமாற்றி ஆட்சின்கு வந்தவர் நரேந்திர மோடி என்று ஸ்டாலின் விமர்சனம் செய்தார். ஒவ்வொரு கூட்டத்திற்கும் 10 பொய்களை மோடி பேசி வருகிறார் என்று தெரிவித்த ஸ்டாலின், கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தருவோம் என ஏமாற்றினார் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் விலைவாசி உயர்வே மோடி ஆட்சியின் சாதனை என்றும், பெரும் நிறுவனங்களுக்காகவே ஆட்சி நடத்துகிறார் என்று கடுமையாக ஸ்டாலின் சாடினார். நரேந்திர மோடி இந்தியாவில் இருக்கிறாரா இல்லை வெளிநாட்டில் இருக்கிறாரா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் ரஃபேல் விவகாரத்தில் நடந்தது ஊழல் இல்லையா என்றும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னால் ஊழல் இல்லையா என்று மத்திய அரசுக்கு கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். மோடி ஆட்சியில் அதிகாரத்தை போல் ஊழலும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது என்றும், மம்தாவை கண்டு மோடி, அமித்ஷாவுக்கு பயம் என ஸ்டாலின் பேசினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : speech ,MK Stalin ,Calcutta , Kolkata, Mamata Banerjee, DMK, Congress, BJP
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு...