×

உலகை அச்சுறுத்தும் அணு ஆயுத விவகாரம் : அமெரிக்க, வடகொரியா அதிபர்கள் மீண்டும் சந்திப்பு

வாஷிங்டன்: அணுஆயுத விவகாரம் குறித்து அமெரிக்கா மற்றும் வடகொரிய அதிபர்கள் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் சர்வதேச நாடுகளின் கண்டனத்திற்கு ஆளானது. குறிப்பாக வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதனைதொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பும்  வடகொரியா அதிபர் கிம் ஜோங் கடந்த ஆண்டு ஜூனில் பேசி பேச்சுவார்த்தை நடத்தினர். என்றாலும் பனிப்போர் ஓய்ந்த பாடு இல்லை இந்நிலையில் இரு நாட்டுத் தலைவர்களும் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியம் என்று ஐநா சபை கூறியுள்ளது.

அணுஆயுத குறைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கான வடகொரியா நியமித்துள்ள சிறப்பு அதிகாரியான கிம் யோங்-சோல், அதிபர் டிரம்பை சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் அடுத்த மாத இறுதியில் மீண்டும் சந்தித்து பேசவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதனிடையே 2-வது சந்திப்பை தங்கள் நாட்டை வைத்துக்கொள்ள வியட்நாம் பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : presidents ,US ,North Korean , US and North Korean presidents, meet again
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்