×

ஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..

பெங்களூரு : ஹரியானா மாநிலம் குருகிராமில் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். பாஜக எம்.எல்.ஏக்கள் தற்போது வரை கடந்த ஒருவாரமாக ஹரியானா ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 12 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்கி பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விலை போவதை தடுப்பதற்காக தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ராம்நகரில் உள்ள கோல்டன் ரிசாட்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

நேற்று பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 79 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இறுதியாக 75 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அந்த 75 எம்எல்ஏக்களும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முடிந்த பிறகு அதிரடியாக தற்போது காங்கிரஸ் கட்சியினர் அவர்களை ரிசார்டுக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவுவதால் குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : HYDERABAD MLAs ,Kurunegala ,Karnataka , HYDERABAD MLAs,Eidurappa, come back to Karnataka
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...