×

இன்டர்நெட் காலனியாதிக்கத்தை இந்தியாவில் அனுமதிக்க கூடாது : பிரதமருக்கு முகேஷ் அம்பானி கோரிக்கை

காந்திநகர்: இன்டர்நெட் காலனியாதிக்கத்தை இந்தியாவில் அனுமதிக்க கூடாது என்று, பிரதமருக்கு முகேஷ் அம்பானி கோரிக்கை விடுத்துள்ளார்.குஜராத்தில் ‘துடிப்பான குஜராத்’ என்ற உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று தொடங்கியது. இதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி பேசியதாவது:

இந்தியாவில் அரசியல் காலனியாதிக்கத்துக்கு எதிராக காந்தி போராட்டம் நடத்தினார். இதுபோல் இன்டர்நெட் காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்ட இயக்கம் துவங்க வேண்டும். இந்த நவீன உலகத்தில், இன்டர்நெட்தான் புதிய சொத்து. இந்தியாவில் இன்டர்நெட் சேவை என்பது இந்திய மக்களால் கட்டுப்படுத்தப்படும் ஒன்றாக இருக்க வேண்டாம். மாறாக, வெளிநாட்டவர்கள் கைகளில் இது போகக்கூடாது. இந்த புரட்சியில் நாம் வெற்றி பெற்றால், இந்திய இன்டர்நெட் கட்டுப்பாட்டை நாம் மீண்டும் இந்தியாவுக்கே ெகாண்டுவர முடியும்.  மோடி ஒரு செயல்வீரர் என்பதை உலகம் அங்கீகரித்துள்ளது. எனவே, டிஜிட்டல் இந்தியாவின் முக்கிய இலக்காக இதை செயல்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Mukesh Ambani , Internet, Mukesh Ambani, request
× RELATED பிப்ரவரிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி