×

தொழில் தொடங்க மிகவும் எளிதான முதல் 50 நாடுகளின் பட்டியலில் அடுத்தாண்டில் இந்தியா : பிரதமர் பேச்சு

காந்திநகர்: ‘‘தொழில் செய்ய மிகவும் எளிதான நாடுகளின் பட்டியலில், அடுத்தாண்டுக்குள் இந்தியா முதல் 50வது இடத்தில் இருக்கும்’’ என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2003ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, முதலீடுகளை கவர்வதற்காக ‘துடிப்பான குஜராத்’ என்ற மாநாட்டை தொடங்கினார். இதன் 9வது மாநாடு தலைநகர் காந்தி நகரில் நேற்று தொடங்கியது, இதை தொடங்கி வைத்து  பிரதமர் மோடி பேசியதாவது:உலக வங்கி தயாரிக்கும் தொழில் செய்ய எளிதான நாடுகள் பட்டியலில், இந்தியா 75 இடங்களை முன்னேறி, தற்போது 77வது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் இந்தியா முதல் 50 இடங்களுக்குள் வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என  கேட்டுக் கொண்டுள்ளேன்.

நம் நாட்டில் தொழில் தொடங்குவதற்கு தடையாக உள்ள விஷயங்களை நீக்குவதற்கு எனது அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக விதிமுறைகள் எளிதாக்கப்படும், மேலும், சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். ‘சீர்த்திருத்தம், செயல்படுத்துதல், மாற்றம் மற்றும் மேலும் செயல்படுத்துதல் என்ற 4 மந்திரங்களுடன் எனது நிர்வாகம் செயல்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வீதம் சராசரியாக 7.3 சதவீதமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு கடந்த 1991ம் ஆண்டிலிருந்து மிக அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,countries , India, List of Easy Countries, Prime Minister's Speech
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...