×

மோடியுடன் கூட்டணி சேர்ந்தால் அதிமுக தோல்வியை சந்திக்கும் : திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: தமிழக காங்கிரசில் கோஷ்டி தலைவர்களின் கடும் எதிர்ப்பினால் தேர்தல் பணிக்குழுக்கள் அமைப்பது தொடர்பாக எந்தவித ஒருமித்த கருத்தும் ஏற்படவில்லை. இதனால் 2 நாட்களுக்கு முன் திருநாவுக்கரசர் டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக்கை சந்தித்து திருநாவுக்கரசர் ஆலோசனை நடத்துகிறார். தமிழக காங்கிரசில் கோஷ்டி தலைவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் புகார் அளிக்கிறார். இதனால் தமிழக காங்கிரசில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இருக்கும் திருநாவுக்கரசர் தொலைபேசியில் கூறுகையில், ‘‘தமிழகத்தில் அதிமுகவை அச்சுறுத்தி எப்படியாவது கூட்டணியில் சேர்த்து தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜ முயற்சி செய்கிறது. பிரதமர் மோடியுடன் கூட்டணி சேர்ந்தாலும் சேராமல் போனாலும் அந்த கூட்டணி தமிழகத்தில் ஒருபோதும் வரமுடியாது. மோடியுடன் சேர்ந்தால் அதிமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் என்பது மட்டும் நிச்சயம்.தமிழக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் பட்டியலை ராகுல் காந்தி விரைவில் வெளியிடுவார்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,interview ,Modi ,Thirunavukkar , Tamilnadu Congress, Tirunavukkarar interview, Alliance, AIADMK, BJP
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி