×

கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் இருந்து 20ம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் வேலூருக்கு இரவு 9.25 மணிக்கு சென்றடையும். மேலும், சிறப்பு ரயிலானது வேலூர் கன்டோன்மென்ட்டில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.25 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.இதேபோன்று 21ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு வேலூர் கன்டோன்மென்ட்டுக்கு மாலை 5.55 மணிக்கு வந்தடையும், அங்கிருந்து பயணிகள் சிறப்பு ரயில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு இரவு 9.30 மணிக்கு வந்தடையும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thiruvannamalai ,festival ,Chirawa , Southern Railways, Special Train Operation, Griwal, Thiruvannamalai
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...