×

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 51 இளம்பெண்கள் சபரிமலையில் தரிசனம்? - அரசு அறிக்கையில் தவறான தகவல்கள் அம்பலம்

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு 51 இளம்பெண்கள் சென்றதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள பெரும்பாலான தகவல்கள் பொய்யானது என தற்போது தெரியவந்துள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சபரிமலையில் இதுவரை 51 இளம்பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இதில் பெரும்பாலானோர் குறித்த தகவல்கள் ெபாய்யானது என தெரியவந்துள்ளது.

51 பேர் அடங்கிய பட்டியலில் 24 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். 25 ேபர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். 2 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். இந்த பட்டியலில் பல ஆண்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.பட்டியலில் உள்ள செல்போன் எண்களை தொடர்பு கொண்டு பேசியபோது ஆண்கள்தான் போனை எடுத்துள்ளனர். அப்போது அவர்கள் தங்களது மனைவியையோ, உறவினர்களையோ சபரிமலைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கூறினர்.

இந்த பட்டியலில் சென்னையை சேர்ந்த ஷீலா (48) என்ற பெண்ணும் உள்ளார். அவர் அளித்திருந்த ெசல்போன் எண்ணில் ெதாடர்பு கொண்ட போது தன்னுடைய உண்மையான வயது 52 என கூறினார். இது குறித்து ஷீலா மேலும் கூறியதாவது: எனது கணவர் வெங்கடேஷ், கடந்த 33 வருடமாக சபரிமலை சென்று வருகிறார். நான் இந்த வருடம் இரண்டாவது முறையாக சபரிமலை சென்றேன். இந்த முறை ஆன்லைனில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தேன்.ஒரு தனியார் இன்டர்நெட் மையத்தில், எனது பெயர், விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை முன்பதிவுக்காக கொடுத்திருந்தேன். அவர்கள்தான் தவறுதலாக எனது வயதை 48 என குறிப்பிட்டார்கள்.
 அப்போதே நான் அதை கவனித்து எனது உண்மையான வயதை குறிப்பிடுமாறு கூறினேன். ஆனால் அதில் ஒன்றும் பிரச்னை ஏற்படாது, சபரிமலையில் போலீசார் கேட்கும் போது வயது குறித்த உண்மையான ஆவணத்தை காண்பித்தால் போதும் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சபரிமலை சென்ற போது சரங்குத்தியில் வைத்து போலீசார் எனது ஆவணங்களை பரிசோதித்தனர். அப்போது நான் எனது உண்மையான வயதை கூறினேன். ஆனால் போலீசார் இதை கண்டுகொள்ளாமல் அவர்களது ஆவணத்தில் எனது வயதை 48 என குறித்துக் கொண்டனர். அதனால் தான் எனது பெயரும் கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் இடம் பிடித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.இதேபோல ஆந்திராவை சேர்ந்த பல பெண்களும் தங்களுக்கு 50 வயதுக்கு மேல் ஆகியுள்ளதாக கூறினர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள தகவல்கள் பொய்யானது என தெரியவந்துள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், பாஜ தலைவர் தரன்பிள்ளை உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆதாரங்கள் இல்லை
திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர் சங்கரதாஸ் கூறியது: சபரிமலையில் 51 இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்ைக தாக்கல் செய்துள்ளது. அது பொய்யாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இளம்பெண்கள் தரிசனம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் தேவசம் போர்டிடம் இல்லை என்றார்.

உறுதியாக கூற முடியாது

கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியது: சபரிமலைக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்த 51 இளம்பெண்களின் பட்டியல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தரிசனம் செய்தார்களா என்பது குறித்து உறுதியாக கூற முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த செப்.28ம் தேதிக்கு பின்னர் சபரிமலை வந்த எந்த பெண்களின் வயதையும் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. எனவே ஆன்லைனில் முன்பதிவு செய்யாத இளம்பெண்களும் தரிசனத்திற்கு சென்றிருக்கலாம். அவர்களின் வயதை ஆய்வு செய்தால் தானே எத்தனை இளம்பெண்கள் சென்றிருப்பார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும்.

வழக்கை பாதிக்காது

பந்தளம் மன்னர் பிரதிநிதி நாராயண வர்மா கூறியது: சபரிமலையில் 51 இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை நாங்கள் நம்பமாட்டோம். அதில் பொய்யான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பிரமாண வாக்குமூலம் என்ற ெபயரில் அரசு தவறான விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளது. இந்த அறிக்ைக சபரிமலை வழக்கை எந்தவிதத்திலும் பாதிக்காது. சபரிமலை கோயில் ஆச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கையாகும். சபரிமலைக்கு ஐயப்பன் மீது நம்பிக்கை கொண்ட எந்த இளம்பெண்களும் வரவில்லை என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : girls ,Sabarimala ,Supreme Court , Sabarimala, young women, darshan, misinformation
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...