×

தொலைந்து போனால் புது ஆதார் அட்டை: 50 கட்டணத்தில் பெறும் வசதி விரைவில் தொடங்க திட்டம்

வேலூர்: மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கவும், நாட்டின் குடிமகனுக்கான அடையாளமாகவும் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பதிவு மற்றும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளை இந்திய தனி அடையாள ஆணையம் யுஐடிஏஐ மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 92 கோடி பேர் ஆதார் அட்டைக்காக பதிவு செய்துள்ளனர். இதில் 90 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 5 வயதுக்கு மேற்பட்ட 7 கோடியே 64 லட்சம் பேரில் 7 கோடியே 16 லட்சம் பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் வசதி 308 அரசு இ சேவை மையங்கள், 1400 வங்கி கிளைகள், 1500 அஞ்சலகங்கள், பிஎஸ்என்எல் சேவை மையங்கள் ஆகியவற்றில் உள்ளன. இந்நிலையில் இவை சேதமாவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை தொடங்கப்பட்டது. அதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களால் இச்சேவை நிறுத்தப்பட்டது.இதற்கு மாற்றதாக ஆதார் எண், அல்லது ஆதார் எண்ணுடன் இணைத்த தொலைபேசி எண்களை கொண்டு இ-சேவை மையங்கள் உள்ளிட்ட மையங்களில் பேப்பர் நகலை பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டை தொலைத்தவர்கள், முற்றிலும் பழுதான அட்டை, அழுக்கான அட்டைக்கு பதில் நீளமான அசல் ஆதார் அட்டை வழங்கும் புதிய சேவையை சோதனை திட்டமாக யுஐடிஏஐ நிறுவனம் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக ஆதார் சேவை மைய அதிகாரிகள் கூறுகையில், ‘புதிய அசல் ஆதார் அட்டை வேண்டுவோர், www.uidai.gov.in என்ற இணையதளத்தில் Order Aadhaar Reprint (pilot Basis) என்ற பகுதியில் நுழைந்து புதிய அட்டைக்கு பதிவு செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு 50 கட்டணமாக ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். அதன் பின்னர் விரைவு தபால் மூலம் ஆதார் அட்டை நமது வீட்டுக்கு வந்துவிடும். இது மாதிரி திட்டம்தான். இதில் குறைகள் இருந்தால் அவை சரி செய்யப்பட்டு நிரந்தர சேவைக்கு உறுதி அளிக்கப்படும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bidding facility , Aadhaar Card, Scheme
× RELATED தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்திற்கு...