×

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம்; முதலீட்டாளர்கள் மாநாடு, பட்ஜெட் குறித்து ஆலோசனை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் பட்ஜெட் குறித்து ஆலோசனை நடைபெற்றது. தமிழகத்துக்கு அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது, கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.

அந்த மாநாட்டில், ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடத்த முடிவெடுக்கப்பட்டு, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், வருகின்ற ஜனவரி 18ம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை, உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே 2 முறை கூடிய அமைச்சரவை கூட்டத்தில், தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள உள்ளது. முக்கியமாக கடந்த மூன்றாம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புதிய நிறுவனங்களை தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cabinet meeting ,Palani Consultants ,investors conference , Chief Minister of Tamil Nadu, Edappadi Palaniasamy, Cabinet meeting, Investors Conference, Central Budget
× RELATED உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்,...