×

திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம்; 26-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்; விவசாயிகள் அறிவிப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர். மத்திய அரசை கண்டித்து வரும் 26-ம் தேதி திருக்காரவாசலில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்படும் என்று திருாவரூரில் பேசிய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதற்காக தியாகராஜன் தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார். ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்ட அறிவிப்பு உள்நோக்கம் கொண்டது என்றும் பி.ஆர்.பாண்டியன் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசு இந்த திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என கூறியுள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை வழங்கப்போவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் உரிமத்திற்கான ஏல அறிவிப்பை தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி சுமார் 419 சதுர கி.மீ. பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் தொடங்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hunger strike ,Tiruvarur ,announcement , Tiruvarur, Hydro carbon project, hunger strike, farmers, PRPandian
× RELATED தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து...