×

டெல்லி அருகே சிக்னலில் நின்ற துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் கத்தியை காட்டி கொள்ளை: 10 பேர் கொண்ட கும்பல் கைவரிசை

புதுடெல்லி:  ஜம்முவில் இருந்து டெல்லி வந்த துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் கத்தியை காட்டி மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்முவில் இருந்து டெல்லி வரும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு டெல்லியை நெருங்கியது. சாரய் ரோஹில்லா ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக ரயில் நின்றது. அப்போது, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 10 பேர் கொண்ட கும்பல் ரயிலில் ஏறியது. பி3, பி7 பெட்டிக்குள் நுழைந்த அவர்கள், பயணிகளை கத்தியை காட்டி மிரட்டியது. அவர்களிடம் இருந்த பணம், நகை, செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பறித்த கும்பல், பின்னர் தப்பிச் சென்றது.

ரயில் சிக்னலுக்காக காத்திருந்த 10 நிமிடங்களில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது.  இந்த சம்பவம் நடந்தபோது ரயில்வே பாதுகாப்பு படையினரோ, ரயில்வே ஊழியர்களோ யாரும் அங்கு இல்லை. 20 நிமிடங்களுக்குப் பிறகுதான் பயணிகள் அவர்களை தொடர்பு கொள்ள முடிந்தது.  அஸ்வினி குமார் என்ற பயணி, இணையதளம் மூலமாக இந்த கொள்ளை சம்பவம் பற்றி புகார் அளித்துள்ளார். அதன் பிறகே, ரயிலில் நடந்த கொள்ளை சம்பவம் பற்றி ரயில்வே போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்னலில் ரயில் நின்றபோது கொள்ளை நடந்திருப்பதால், இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi , Duranto,Express train, Srinagar, Delhi
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...