×

வாக்குகளை பெறவே 10 சதவீத இடஒதுக்கீடு: யெச்சூரி குற்றச்சாட்டு

புதுடெல்லி: `பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி இருப்பது, அவர்களின் வாக்குகளை பெற மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.   பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த வருகின்றன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மோடி அரசின் திட்டம்,  மிகவும் மோசமான நடவடிக்கையாகும்.
இப்பிரிவு மக்களின் வாக்குகள் பாஜ.வுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையி தான் இந்த புதிய சட்டத்தை அவர்கள் கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசு நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு மறுக்கிறது. அந்த நிறுவனங்களை அழிக்க மோடி அரசு முயற்சிப்பது ஏன்?  நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கவும் மறுக்கிறது. இதன்மூலம், அவர்களை சூறையாட முயற்சிக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Yehuri , 10 percent,reservation, get votes,Yechuri's allegation
× RELATED ரூ.2,000 நோட்டுகளை ஆர்பிஐ-யில் கொடுத்து மாற்றியது திருப்பதி தேவஸ்தானம்..!!