×

பத்திரிகையாளர் கொலை வழக்கில் குர்மீத் உள்பட 4 பேருக்கு ஆயுள்: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சண்டிகர்: அரியானாவை சேர்ந்த பத்திரிகையாளரை சுட்டுக்கொலை செய்த வழக்கில், ‘தேரா சச்சா சவுதா’ தலைவர் குர்மீத் ராம் ரகீம் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியானா உட்பட பல இடங்களில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற ஆன்மீக அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வந்தவர் குர்மீத் ராம் ரகீம். இவர் தனது ஆசிரம பெண்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது, ரோதாக் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய தேரா அமைப்பின் மேலாளர் கிருஷண்லால் உட்பட மேலும் 3 பேர் அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆசிரமத்தில் நடந்த பலாத்கார சம்பவங்கள் பற்றிய செய்தி வெளியிட்ட ‘பூரா சாச்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் ராம் சந்தர் சத்ரபதியை கடந்த 2002ம் ஆண்டு, குர்மீத்தின் கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. இது தொடர்பான வழக்கு பஞ்சகுலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குர்மீத், கிருஷண்லால், சத்ரபதியை துப்பாக்கியால் சுட்ட குல்தீப் சிங் மற்றும் நிர்மல் சிங் ஆகிய 4 பேர் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்டது. கடந்த 11ம் தேதி சிபிஐ நீதிபதி ஜெகதீப் சிங் அளித்த தீர்ப்பில், 4 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்தார். இவர்களுக்கான தண்டனையை 17ம் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி, இந்த வழக்கில் தண்டனை விவரத்தை நீதிபதி ெஜகதீப் சிங் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிவித்தார். அதில், குர்மீத் உட்பட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI , CBI,special court, ruling ,imprisonment
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...