×

நெல்லை - திருச்செந்தூர் சாலையில் பழமைவாய்ந்த மரம் வேரோடு சாய்ந்தது

செய்துங்கநல்லூர் :  நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பிரதான சாலையில், எப்போதும் போக்குவரத்திற்கு பஞ்சமிருக்காது. தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. இச்சாலையில் கருங்குளத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரையிலான பகுதியில் சாலையோரத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் காற்று, கனமழை காலங்களில் சாலையில் விழுந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவது வாடிக்கையாகும்.

நேற்று முன்தினம் பொங்கலன்று  அதிகாலையில் நெல்லை அருகே கருங்குளம் - புளியங்குளத்துக்கு இடையே மிகவும் பழமைவாய்ந்த புளியமரம் ஒன்று திடீரென வேரோடு  சாலையில் சாய்ந்து விழுந்தது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டுநர்கள், பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாயினர். குறிப்பாக, பொங்கலை முன்னிட்டு வெளியூரில் இருந்து ஊருக்குச் செல்ல வாகனங்கள் மற்றும் பஸ்களில் வந்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

 தகவலறிந்து விரைந்துசென்ற செய்துங்கநல்லூர் போலீசார்,  உடனடியாக போக்குவரத்தை கருங்குளம்- கொங்கராயகுறிச்சி ஆற்றுப்பாலம் வழியாக திருப்பிவிட்டனர். பின்னர் அங்குவந்த தீயணைப்பு படையினர் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர். இருப்பினும் அப்பகுதியில்  2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொங்கல் திருவிழாவிற்கு வந்த பயணிகள்  பரிதவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Tiruchendur ,Nellai , Nellai ,tiruchendur ,old tree,root
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...