×

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய 4 கன்னியாஸ்திரிகள் வெளியேற உத்தரவு!

கொச்சி: கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக போராடிய 4 கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தங்கியுள்ள கான்வென்ட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முலக்கல், கேரளாவில் உள்ள கான்வென்டில் வைத்து தன்னை 2014 -16ம் ஆண்டு வரை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஆண்டு புகார் அளித்தார். இந்தப் புகார் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் ஆரம்பத்தில் ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பிஷப்பை கைது செய்யக்கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாஸ்திரிகள் கொச்சியில் தொடர் போராட்டம் நடத்தினர். வாட்டிகனுக்கும் கன்னியாஸ்திரிகள் புகார் அனுப்பினர்.

இதையடுத்து, பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு பிராங்கோ முளய்க்கல் போலீஸார் முன்னிலையில் ஆஜரானார். இதயடுத்து பிராங்கோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியானார். இந்நிலையில் பிரான்கோவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரிகள் அல்பி பல்லாசெரில், அனுபமா,ஜோசபின் வில்லுனிக்கல், அஞ்சிடா உரும்பில் ஆகியோரை வேவ்வேறு இடங்களுக்கு தனித்தனியாக மாற்றி, இயேசு மிஷனரிகள் திருச்சபை தலைவர் ரெஜினா கடம்தொட்டு உத்தரவிட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு கன்னியாஸ்திரியான நினா ரோஸ்க்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மேலும் தற்போது தங்கியிருக்கும் இடத்தில் இருந்து வெளியேறும் திட்டமில்லை என்று அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nuns ,bishop , Sexual complaint,Bishop Franco,Nuns,Transfer,Order
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது