×

அரசு நிர்வாகம் முடங்கியதால் சம்பளம் வராத அமெரிக்க ஊழியர்களுக்கு உணவளிக்கும் சீக்கியர்கள்

ஹூஸ்டன்: அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடக்கத்தால் சம்பளம் வராமல் தவிக்கும் ஊழியர்களுக்கு, அங்குள்ள சீக்கியர்கள் இலவசமாக உணவளித்து உதவி உள்ளனர்.அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத ஊடுருவலை தடுக்க சுவர் எழுப்ப வேண்டுமென்பதில் அதிபர் டிரம்ப் பிடிவாதமாக இருக்கிறார். இதற்காக, 5.7 பில்லியன் டாலர் நிதியை அரசு வழங்குவதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனால் ஆண்டு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாததால், அரசு நிர்வாகம் தற்காலிகமாக முடங்கியுள்ளது. 4வது வாரத்தை எட்டும் அரசு முடக்கத்தால், சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை. சம்பளமின்றி அவர்கள் பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பளம் வராமல் பாதிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு உதவும் வகையில், டெக்சாஸ் மாகாணம் சான் ஆன்டனியோ நகரில் உள்ள சீக்கிய சமூகத்தினர் இலவச உணவளித்து உதவி உள்ளனர். கடந்த 11ம் தேதி இலவச உணவளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அங்குள்ள சீக்கியர் மையத்தில் அரசு ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சுடச்சுட சைவ உணவு வழங்கப்பட்டது.  குருத்துவாராவில் வழங்கப்படுவதைப் போல பருப்பு, அரிசி உணவும், சப்பாத்தி ரொட்டியும் வழங்கினர். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு ஏராளமான அரசு ஊழியர்கள் உணவருந்தி உள்ளனர். சீக்கியர்களின் இந்த சேவை பெரும் பாராட்டை பெற்றுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sikhs ,American ,government ,stall , America, Sikhs, Free Food
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...