×

ரத யாத்திரைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி மேற்குவங்க பாஜ தீவிர ஏற்பாடு : அமித் ஷா பங்கேற்க திட்டம்

கொல்கத்தா : ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்குவங்க பாஜ நிர்வாகிகள் செய்து வருகின்றனர். மேற்குவங்க மாநிலத்தில் கடந்தாண்டு டிசம்பர் 7 முதல் 14ம் தேதி வரை பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் ரத யாத்திரையை நடத்த மாநில பாஜ கட்சி முடிவு செய்தது. இதற்கு, மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பாஜ தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ரத யாத்திரைக்கு அனுமதி தர உத்தரவிட்டார். எனினும் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், பாஜ மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, ரத யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சட்டம், ஒழுங்கு பாதிக்காத வகையில், நியாயமான முறையில், ரத யாத்திரைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம்’ என தெரிவித்துள்ளது. அதனால், விரைவில் மேற்குவங்கத்தில் அமித் ஷா தலைமையில் ரத யாத்திரை நடக்க வாய்ப்புள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை மாநில பாஜ தீவிரப்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,Rath Yatra , Supreme Court, grants permission, Rath Yatra
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...