×

ஆசியக் கோப்பை கால்பந்து : ஜோர்டன், ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு தகுதி

சார்ஜா: 24 அணிகள் பங்கேற்றுள்ள 17வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தலா 4 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றிருந்தது. முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா, அடுத்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் தரவரிசையில் 97வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் 113ம் நிலையில் உள்ள பக்ரைன் அணியுடன் மோதியது. இதில் டிரா செய்தாலே இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நிலையில், இந்தியா தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது. ஆட்டம் முடிய 3 நிமிடம் இருந்த நிலையில், பெனால்டி ஷுட் வாய்ப்பில் பக்ரைன் கோல் அடித்தது. முடிவில் 1-0 என பக்ரைன் வெற்றி பெற்றது. இதையடுத்து ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த  யுஏஇ, தாய்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்தியா கடைசி இடம் பிடித்து வெளியேறியது.
இதனிடையே நேற்று நடந்த லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 3-2 என சிரியாவை வீழ்த்தியது. பாலஸ்தீனம்-ஜோர்டான் அணிகள் மோதிய போட்டி கோல்கள் இன்றி 0-0 என சமனில் முடிந்தது. பி பிரிவில் ஜோர்டான், ஆஸ்திரேலியா அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. இன்று கிரிகிஸ்தான்-பிலிப்பைன்ஸ், தென்கொரியா-சீனா, ஈரான்-ஈராக்,  வியட்நாம்-ஓமன் அணிகள் மோதுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asian Cup ,Jordan ,Australia ,round , Asian Cup football, Jordan and Australia ,qualify for next round
× RELATED சில்லிபாயின்ட்…