×

ஆப்கான் குண்டுவெடிப்பு : இந்தியர் ஒருவர் பலி; 100 பேர் காயம்

டெல்லி : ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  காபூலில் வெளிநாட்டு தூதரகங்கள், கட்டடங்கள் அமைந்த பகுதியில் வெடிகுண்டு வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.மேலும் 100 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த வளாகத்தில் சமீபத்தில் ஐ.நா. சபை ஊழியர்கள் சிலர் வசித்து, பணிபுரிந்து வந்தனர். ஆனால் சம்பவம் நடந்தபொழுது ஒரு சில காவலர்கள் இருந்தனர் என்றும் மற்றவர்கள் யாரும் இல்லை என்றும் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி நஜீப் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் : காபூலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் ஒருவர் மற்றும் வெளிநாட்டினர் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெற வேண்டும் என பிரார்த்திக்கிறோம். உயிரிழந்த இந்தியரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர இந்திய தூதரகம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Afghan ,Indian , Afghan blast,one Indian killed ,100 injured
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்