×

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் துவங்கியது

அடிலெய்டு: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் துவங்குகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. சிட்னியில் நடைபெற்றஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா வெற்றி பெற 0-1 என பின் தங்கியது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தேடுத்தது. அடிலெய்டில் டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இந்தியா அணி உள்ளது. இந்நிலையில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கலீல் அகமதுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டி முகமது சிராஜூக்கு ஒருநாள் போட்டியாகும். இதைணடுத்து களமிரங்கிய ஆஸ்திரேலியா அணி 13 ஓவருக்கு 52 ரன்கள் எடுத்து 2 விக்கெட்களை இழந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலெக்ஸ் கேரேவும், கேப்டன் ஃபின்ச்சும் களமிரங்கினர். பந்து வீச்சில் இந்திய அணியில் முதல் ஓவரை புவனேஷ்குமார் வீசினார். கடந்த போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Adelaide ,match ,teams ,Australia ,India , second,one-day match, started , Adelaide, w
× RELATED ஐபிஎல்: பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்