×

அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரில் திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலு சஸ்பெண்ட்..! தேர்தல் ஆணையம் நடவடிக்கை..!

சென்னை: அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரில் திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 25-ம் தேதி அமைச்சர் கே.சி.வீரமணியின் சகோதரர் அழகிரி காரில் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்வதில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக டி.எஸ்.பி. தங்கவேலு செயல்பட்டதாக புகார் எழுந்தது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் அனைத்தும் மறைமுகமாக பணத்தையும் பரிசு பொருட்களையும் விநியோகிக்கத் தொடங்கிவிட்டன. இதைத் தடுக்கும் பொருட்டு, வருமான வரித்துறையினரும் பறக்கும் படையினரும் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரையில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.300 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அண்மையில் தெரிவித்திருந்தார். அவ்வாறு பணப்பட்டுவாடா விவகாரத்தில் சிக்கும் அரசு ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர், திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில் பணியாற்றி வந்த 6 காவலர்கள் அரசியல் கட்சியினருடன் இணைந்து பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில், அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலுவை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 25ம் தேதி, அமைச்சர் வீரமணியின் சகோதரர் காரில் இருந்த பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான புகாரில், சம்பந்தப்பட்டவர்கள் மீது எஸ்.பி தங்கவேலு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்குப்பதிவு செய்வதில் அவர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் எஸ்.பி. தங்கவேலு மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

The post அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரில் திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலு சஸ்பெண்ட்..! தேர்தல் ஆணையம் நடவடிக்கை..! appeared first on Dinakaran.

Tags : Minister ,K. ,CMC ,Thirupathur TD ,Veeramani ,S.S. GP ,Thangavelu Suspend Election Commission ,Chennai ,K. RC Thirupathur TD ,Election Commission ,Thangavelua ,Dinakaran ,
× RELATED திராவிட மாடல் என்பது இந்திய...