×

கும்பகோண்தில் மாட்டுப் பொங்கலுக்காக நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பு

கும்பகோணம்: மாட்டுப் பொங்கலன்று கால்நடைகளை அலங்கரிப்பதற்காக கும்பகோணம் அருகே நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தைப் பொங்கலுக்கு மறுநாளான மாட்டுப் பொங்கலன்று, கால்நடைகளுக்கு வண்ண வண்ண நெட்டி மாலைகள் அணிவித்து அலங்கரிப்பது வழக்கம். கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் வசிக்கும் பல குடும்பத்தினர் நெட்டி மாலைகளை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றங்கரைகள், குளக்கரைகளில் வளரும் நாணல்களைக் கொண்டு வந்து தோல் சீவி அதனை காய வைத்து நெட்டி மாலைகள் செய்யப்படுவதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆற்றங்கரைகளில் நாணல்களே இல்லாததால், விலை கொடுத்து வாங்குவதாகவும், இதனால் 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை நெட்டி மாலைகளை விற்பதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். தென்னம்பாளை உள்ளிட்ட நார்களில் அழகாக கோர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் நெட்டி மாலைகள் கால்நடைகளுக்கு கூடுதல் அழகு சேர்ப்பது மட்டுமல்ல, நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் நிலைநிறுத்துகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Interesting , prepare,nettle mats,cow pong,Kumbakon
× RELATED ஓட்டப் பந்தயத்திற்கு உசேன் போல்ட்.....