×

எண்ணூர் விரைவு சாலையில் உடைந்து கிடக்கும் சிசிடிவி கேமராக்கள்: சீரமைக்க போலீசார் தயக்கம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே எண்ணூர் விரைவு சாலையில்  உள்ள சென்டர் மீடியனில் ஆங்காங்கே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, காவல் மாநகர ஆணையர் விஸ்வநாதன் இயக்கிய வைத்தார்.  இந்நிலையில்,  முறையான பராமரிப்பு இல்லாததால் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே எண்ணூர் விரைவு சாலையில் பொருத்திய  சிசிடிவி கேமராக்கள் உடைந்து கிடக்கிறது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘எண்ணூர் விரைவு சாலையில் எல்லையம்மன் கோயில் தெரு, ராமகிருஷ்ணன் நகர் சந்திப்பு, சாத்தாங்காடு யார்டு ஆகிய இடங்களில் போலீசார் லாரி டிரைவரிடம் பணத்தை  வாங்கிக்கொண்டு  விதிமீறி  கன்டெய்னர் லாரிகளை  அனுப்புகின்றனர்.

இவ்வாறு செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கிறது. தற்போது சிசிடிவி கேமரா  பொருத்தப்பட்டதால் போலீசார் லாரி ஓட்டுனர்களிடம் பணம் வாங்கினால் அது   சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில்  பதிவாகும்.  இது போக்குவரத்து போலீசாருக்கு  பெரும் சிக்கலை  ஏற்படுத்தி உள்ளது. இதனால்  சிசிடிவி கேமரா  பழுதானால் கூட அதை சரி செய்வதில் போக்குவரத்து போலீசார் ஆர்வம் காட்டுவதில்லை.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CCTV ,Ennore Express Road , Ennore, Expressway, Broken ,CCTV cameras
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...