மெஸ்ஸி 400

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா அணி நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது 400வது கோல் அடித்து அசத்தியுள்ளார். எய்பர் அணியுடன் நேற்று முன்தினம் இரவு நடந்த  போட்டியில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணி சார்பில் லூயிஸ் சுவாரெஸ் 19வது மற்றும் 59வது நிமிடங்களில் கோல் போட்டார்.

கேப்டன் மெஸ்ஸி 53வது நிமிடத்தில் கோல்  அடித்தார். லா லிகா தொடரில் அவர் அடிக்கும் 400வது கோல் இது. தனது 435வது லீக் ஆட்டத்தில் அவர் இந்த சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார். அனைத்து அணிகளும் தலா 19 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ள  நிலையில், பார்சிலோனா அணி 43 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அத்லெடிகோ மாட்ரிட் (38 புள்ளி), செவில்லா (33), ரியல் மாட்ரிட் (33), அலாவெஸ் (32) அணிகள் அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Messi 400 , Messi ,400
× RELATED உலக குத்துச்சண்டை போட்டியில்...