×

கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு சதி மஜத-காங். பதிலடியால் பாஜ கலக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டுள்ள பாஜ.வுக்கு மஜத- காங்கிரஸ் கூட்டணி பதிலடி கொடுத்துள்ளது. தனது கட்சி எம்எல்ஏ.க்களை இக்கூட்டணி இழுப்பதை தடுக்–்க, 103 பேரையும் அரியானாவுக்கு பாஜ அழைத்துச் சென்று சொகுசு விடுதியில் போலீஸ் பாதுகாப்புடன் தங்க வைத்துள்ளது. இதனால், கர்நாடகா அரசியலில் பெரு்ம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில்  மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, ஆட்சியை பிடிக்க பாஜ மீண்டும் தீவிர முயற்–்சியில் இறங்கியுள்ளது. இதற்காக, தனது ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை  பயன்படுத்துகிறது. இதன் மூலம், சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர், காங்கிரசை சேர்ந்த 8 எம்எல்ஏ.க்கள் என மொத்தம் 10  எம்எல்ஏ.க்களை இழுக்க பாஜ முயற்சி செய்து வருகிறது. இது வெற்றி பெற்றதும் காங்கிரஸ், மஜத.வை சேர்ந்த மேலும் 10 எம்எல்ஏ.க்களை இழுக்கவும் அது திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, பாஜ எம்எல்ஏ.க்்களை தங்கள் பக்கம் இழுக்க, ‘ஆபரேஷன் கை’ திட்டத்தை காங்கிரசும் பிரயோகிக்க தொடங்கியுள்ளது.

காங்கிரசின் வலையில் பாஜ எம்எல்ஏ.க்கள் விழுந்து விடுவதை தடுக்க, எடியூரப்பா உட்பட  தனது 104 எம்எல்ஏ.க்களையும் டெல்லிக்கு வரும்படி கட்சி மேலிடம் அழைத்தது. மேலும்,  நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசவேண்டி இருப்பதால் அனைவரும் கட்டாயம்  டெல்லிக்கு வரும்படி பாஜ மாநில தலைவர் எடியூரப்பா உத்தரவிட்டார். அதன்படி, 3  நாட்களுக்கு முன் பாஜவை சேர்ந்த 104 எம்எல்ஏக்களும் டெல்லிக்கு சென்றனர்.  பாஜவின் தேசிய மாநாடு முடிந்த பின்னர், கர்நாடகாவுக்கு திரும்ப  செல்ல  வேண்டாம். இங்கேயே தங்கியிருக்க வேண்டும் என 103 எம்எல்ஏக்களுக்கும்  எடியூரப்பா உத்தரவிட்டார். சில எம்எல்ஏக்கள் சங்கராந்தி விழா இருப்பதால்  தங்களை கர்நாடகாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  ஆனால், யாருக்கும் எடியூரப்பா அனுமதி அளிக்கவில்லை. இதனால், அனைத்து  எம்எல்ஏக்களும் டெல்லியிலேயே தங்கினர்.

இந்நிலையில், டெல்லியில் தங்க  வைத்தால் காங்கிரசார் எப்படியாவது ெதாடர்பு கொள்ளக்கூடும் என்ற  காரணத்திற்காக நேற்று பாஜ எம்எல்ஏக்கள் அனைவரும் அரியானாவுக்கு அனுப்பி  வைக்கப்பட்டனர். அங்குள்ள ெசாகுசு விடுதி ஒன்றில் அவர்கள் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து  தகவல் வெளியாகும் வரை அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என பாஜ  எம்எல்ஏ.க்களுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரியானாவில்  பாஜ ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக மனோகர் லால் கட்டர்  இருப்பதால் ெசாகுசு விடுதியில் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் டெல்லியில் கர்நாடக  பவனில் தங்கியிருந்த எம்எல்ஏக்கள் அனைவரையும் மும்பைக்கு அழைத்துச் செல்ல  பாஜவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், மும்பையை காட்டிலும், அரியானாதான் பாதுகாப்பானது என்ற காரணத்திற்காக பாஜ எம்எல்ஏக்கள் அங்கு  அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக, நேற்று டெல்லியில்  தங்கியிருந்த எம்எல்ஏ.க்கள் அனைவருடனும் காலை 11 மணி அளவில் அமித்ஷா  நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால்,  பகல் 1 மணி வரை எந்த  ஆலோசனையும் நடக்கவில்லை. பின்னர், மாலை 3 மணிக்கு மேல் அனைத்து  எம்எல்ஏக்களும் அரியானாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், கர்நாடகாவில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணியும், பாஜ.வும் பரஸ்பரம் எம்எல்ஏ.க்்களை இழுக்கும் போட்டோ போட்டியில் ஈடுபட்டு இருப்பதால், கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆட்சிக்கு ஆபத்தில்லை - குமாரசாமி நம்பிக்கை

கர்நாடகா முதல்வர் குமாரசாமி, மைசூருவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மஜத - காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 12 எம்எல்ஏ.க்கள்  பாஜ.வுக்கு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் பொங்கல் பண்டிகைக்கு பின்  மாநிலத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமையும்  என்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் பாஜ ஆட்சி அமையும் என்று செய்தி  வெளியிட்டுள்ளனர். இப்படி கற்பனை செய்தி.
இது ஒருநாளும்  நனவாகாது. யார் என்ன குழி பறிக்க நினைத்தாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது. மும்பை, டெல்லி சென்றுள்ள  எங்கள் எம்எல்ஏ.க்கள் சொந்த விஷயமாக சென்றுள்ளனர். அவர்கள் என்னிடம் கூறிவிட்டு தான்  சென்றுள்ளனர். எங்கள் எம்எல்ஏ.க்களை வளைக்க பாஜ தனது ‘ஆபரேஷன் தாமரை’யை கையில் எடுத்தால், அதற்கு பதிலடி  கொடுக்கும் அஸ்திரம் எங்களிடம் உள்ளது’’ என்றார்.

இடம் மாற்றியது ஏன்?
எடியூரப்பா கூறுகையில், ‘‘காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்ன ஆனார்கள் என்பது  பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், மஜத-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை  பாஜ.வினர் இழுக்க முயற்சிக்கிறார்கள் எனக் கூறி, பாஜவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ் முயற்சிக்கலாம் அல்லவா?. எனவேதான், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் நோக்கில், 103 எம்.எல்.ஏ.க்களை ரகசிய இடத்தில் பத்திரமாக தங்க வைத்துள்ளோம்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Majatha-khang ,Karnataka , Karnataka, coup ploy, Bhaj, Congress coalition, kumarasamy
× RELATED முஸ்லிம்கள் எதிர்ப்பு: இந்தி படத்துக்கு தடை: கர்நாடக அரசு உத்தரவு