×

அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு செல்லும் டிப்பர் லாரிகளால் கல்லக்குடி கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? : நீதிமன்றம் கேள்வி

மதுரை : அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு செல்லும் டிப்பர் லாரிகளால் கல்லக்குடி கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த காந்தி என்பவர் தொடர்ந்த வழக்கு ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சிமெண்ட் ஆலைக்கு செல்லும் டிப்பர் லாரிகளால் ஏற்படும் தூசு மாசுவால் கல்லக்குடி பள்ளி குழந்தைகளுக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் புகார் கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kallukudi ,village ,Ariyalur ,cement plant , Ariyalur, cement, plant, court, question, dust pollution
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...