×

ஆஸி மண்ணில் சதமடித்தால் தோல்விதான்...... மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மா

சிட்னி: ஆஸ்திரேலிய மண்ணில் அதிக முறை சதம் அடித்து, போட்டியை வெல்ல முடியாதவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 288 ரன்கள் குவித்தது. பின்னர் 289 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா 10 பவுண்டரி, 6 சிக்சருடன் 129 பந்தில் 133 ரன்கள் விளாசினார். ரோகித் சர்மா சதம் அடித்தாலும் இந்தியாவின் மற்ற வீரர்கள் சொதப்பிய காரணத்தால் 34 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ரோகித் சர்மா ஆஸ்திரேலியா மண்ணில் ஏகபினவே மூன்று சதங்கள் விளாசியுள்ளார். இப்போட்டியில் அவர் 4-வது சத்தத்தை பதிவு செய்தார். இந்த நான்கு போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக சதம் அடித்தும், அணியை வெற்றி பெற வைக்க முடியாத வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடம் பிடித்துள்ளார். 2015-ல் மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் 138 ரன்கள் குவித்திருந்தார். 2016-ல் பெர்த்தில் 171 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே வருடத்தில் பிரிஸ்பேன் ஆட்டத்தில் 124 ரன்களும், தற்போது சிட்னி டெஸ்டில் 133 ரன்களும் அடித்துள்ளார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aussie ,Rohit Sharma , Rohit Sharma, Australia, India,
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...