×

திருத்தணியில் பரபரப்பு: 4 கடைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு பொருட்கள் எரிந்து நாசம்

சென்னை : திருத்தணியில் பைக் உதிரிபாகங்கள் கடை உள்பட 4 கடைகளுக்கு மர்ம நபர்கள் திடீர் என தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி புறவழிச்சாலையில் பைக் உதிரிபாகங்கள் கடை உள்ளது. இதன் உரிமையாளர் கலில் ரஹ்மான். இவரது கடையின் அருகே அசோக்குமார் என்பவர் மெக்கானிக் ஷெட் நடத்தி வருகிறார். மேலும் இந்த பகுதியில் தரணிவராகபுரம் கிராமத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் கட்டுமான பொருட்களுக்கு பயன்படுத்திவரும் சென்ட்ரிங் பொருட்கள் கடை நடத்தி வருகிறார். மதன்பாய் என்பவர் பிரியாணி கடை வைத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு வழக்கம்போல கடை உரிமையாளர்கள் அனைவரும் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றனர். அப்போது வந்த மர்ம நபர்கள், பைக் உதிரிபாகங்கள் கடை, மெக்கானிக் ஷெட் ஆகிய கடைகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்த கடைகளில் பற்றிய தீ மற்ற கடைகளுக்கு வேகமாக பரவியது.  இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் மெக்கானிக் ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த 13 பைக்குகள் எரிந்து நாசமானது. ஸ்பேர் பார்ட்ஸ் கடை முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

இது போல் கட்டுமான கடையில் இருந்த பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. பிரியாணி கடையில் இருந்த சாமான்களும் தீப்பிடித்து எரிந்தது. இந்த கடைகளில் மொத்தம் 20 லட்ச ரூபாய்க்கு மேல் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.  றறஇதுகுறித்த புகாரின் அடிப்படையில், திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக விஷமிகள் யாராவது தீவைத்தார்களா அல்லது மின்கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தா என  விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storeyers , Thirutani,sensation,stores,unidentified persons,burned,sabotage
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...