×

வாகன சோதனையில் பிடிபட்டார் பைக் பதிவு எண்ணை காரில் பொருத்தி ஓட்டிய ஆசிரியர்

சென்னை: சென்னை வாலாஜா சாலையில் ேநற்று முன்தினம் திருவல்லிக்கேணி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேப்பாக்கம் நோக்கி TN 61-D 1811 என்ற பதிவு எண் பொருத்தப்பட்ட மாருதி கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார், அந்த வாகனத்தை மறித்து ஆவணங்களை சரிபார்த்தபோது, காரில் பொருத்தப்பட்டு இருந்த பதிவு எண், இருசக்கர வாகனத்தின் பதிவு எண் என்பது தெரியவந்தது. ஆனால் காரில் இருந்த ஆர்சி புத்தகத்தில் TN-61 D 3696 என்ற எண் இருந்தது. விசாரணையில், அது அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்த தினேஷ்பாபு (29) என்ற அரசு பள்ளி ஆசிரியருக்கு சொந்தமான கார் என்றும், அவரது நண்பர், காரைக்குறிச்சி பள்ளியில் ஆசிரியராக உள்ள கதிரவன் என்பவர் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.

கவனக்குறைவால், வேறு வாகனத்தின் எண்ணை தவறாக காரில் பொருத்தி ஓட்டியதும் தெரிய வந்தது. பின்னர் போலீசார் காரின் உரிமையாளர் தினேஷ்பாபுவை தொடர்பு கொண்டு காருக்கான அனைத்து ஒரிஜினல் சான்றுகளை எடுத்து வரவேண்டும் என்று கூறினர். அதன்படி நேற்று தினேஷ்பாபு காருக்கான  அனைத்து ஒரிஜினல் ஆவணங்களுடன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரானார். இதைதொடர்ந்து போலீசார் காருக்கான ஆவணங்களை சரிபார்த்து அரசு பள்ளி ஆசிரியர் தினேஷ்பாவுவை கடுமையாக எச்சரித்து, சரியான பதிவு எண்ணை பொருத்தி  அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : test,bike,vehicle,registration number,car,driving teacher
× RELATED திருத்தணி அருகே பேருந்தில் சீட்...