×

பேருந்து விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவனுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பேருந்து விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நெற்குன்றம், சிடிஎன் நகரை சேர்ந்தவர் விஜய். இவர் கடந்த 2015ம் ஆண்டு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ன மாநகராட்சி பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நெற்குன்றம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, விஜய் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். ஆனால் நடத்துனர், மாணவன் இறங்குவதை பார்காமல் விசில் அடித்துள்ளார். இதனால் ஓட்டுனரும் பேருந்தை எடுத்துள்ளார்.

அதில், விஜய் தவறி கிழே விழுந்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த விஜய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் விஜய் எம்.டி.சி நிர்வாகத்திடம் இருந்து ₹46 லட்சம் இழப்பீடு கோரி, சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஐய்யப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.டி.சி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், மாணவர் படியில் பயணம் செய்தபோது கை தவறி விழுந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காரணமில்லை, மாணவரின் கவண குறைவே காரணம். மேலும் அதிக இழப்பீடும் கோரியுள்ளனர்.

எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினர். பின்னர் நீதிபதி மாணவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார், விபத்தினால் அவரது படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது, 41 நாள் மருத்துவ சிகிச்சைக்கும் செலவு செய்துள்ளார். எனவே எம்.டி.சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவருக்கு ₹3 லட்சத்து 96 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : college student ,bus accident , compensation,college student,injured,bus accident,Court,order
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது