×

ஹர்திக், ராகுலுக்கு பதிலாக விஜய் ஷங்கர், கில் தேர்வு

மும்பை: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேட்டியளித்து சர்ச்சையில் சிக்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலுக்கு பதிலாக விஜய் ஷங்கர், ஷுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் இருவரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக கருத்துகளை தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது. சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்ட கிரிக்கெட் வாரியம், இருவரையும் சஸ்பெண்ட் செய்ததுடன் உடனடியாக நாடு திரும்புமாறு கேட்டுக்கொண்டது. சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியிலும் இவர்கள் சேர்க்கப்படவில்லை. இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் ஹர்திக், ராகுலுக்கு பதிலாக தமிழக ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர், பஞ்சாப் பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது.

அடிலெய்டில் நாளை நடைபெற உள்ள 2வது போட்டிக்கு முன்பாக விஜய் ஷங்கர் அணியில் இணைந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஆஸி. மற்றும் நியூசிலாந்து தொடர்களுக்கான அணியில் இடம் பெறுவார். இதுவரை சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத கில், நியூசிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* ஐபிஎல் டி20 தொடரில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பேடி அப்டான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 2013-15ல் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். 2016, 17 சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அப்டான், தற்போது மீண்உம் ராஜஸ்தான் அணிக்கு திரும்பியுள்ளார்.
* முழங்கை மூட்டு காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆஸி. அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளதால் ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.
* பிக் பாஷ் டி20 தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 101 ரன் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியை வீழ்த்தியது. பிரிஸ்பேன் ஹீட் 20 ஓவரில் 192/4 (பிரையன்ட் 44, மெக்கல்லம் 69, லின் 66*). ரெனகேட்ஸ் 17.5 ஓவரில் 91 ஆல் அவுட்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Harik ,Vijay Shankar ,Rahul ,Kill Gill , Hardik,Vijay Shankar,Rahul,Gill
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு