×

மேகாலயாவில் செயல்படும் 1200 சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

ஷில்லாங்: மேகாலயாவில் சட்ட விரோதமாக செயல்படும் 1200 நிலக்கரி சுரங்கங்களை மூட நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ைஜந்தியா மாவட்டத்தில் சட்ட விரோத நிலக்கரி சுரங்கங்கள் அதிகளவில் உள்ளன. ‘எலி வளை சுரங்கம்’ என இவை அழைக்கப்படுகின்றன. இவற்றில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி நிலக்கரி தோண்டி எடுக்கப்படுகிறது. இதனால் கடந்த 2014ம் ஆண்டே இது போன்ற சுரங்கங்களில் நிலக்கரி எடுப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒட்டுமொத்த தடை விதித்தது. அதையும் மீறி இந்த குறுகிய குகைக்குள் நிலக்கரி வெட்டி எடுக்கும்பணி சட்டவிரோதமாக நடந்து வருகிறது.

கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள லும்தாரி கிராமத்தில் குறுகிய நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ளன. இதன் அருகே உள்ள லைடேன் ஆற்றில் கடந்த மாதம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் இந்த குறுகிய சுரங்கங்களுக்குள் வெள்ளி நீர் புகுந்தது. இதனால் ஒரு சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கச் சென்ற 15 பேர் சிக்கி கொண்டனர். இவர்கள் மீட்கும் முயற்சிகள் எந்த பலனும் அளிக்கவில்லை. இந்நிலையில் மேகாலயாவில் செயல்படும் 1200 சட்டவிரோத சுரங்கங்களில் நிலக்கரி எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Meghalaya ,National Green Tribunal , order,action,operating,Meghalaya,Action,National Green,Tribunal
× RELATED மேகாலயா முதல்வர் பிரசாரத்தில் ரூ.1 கோடி பறிமுதல்