×

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு - நளினி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்

சென்னை:  சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் ₹30 ஆயிரம் கோடியை முதலீடாக பெற்று மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கொல்கத்தா  நீதிமன்றத்தில் சிபிஐ தனது 6வது கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.இந்த குற்றப்பத்திரிகையில் நளினி சிதம்பரத்தை குற்றம் சாட்டப்பட்டவராக சிபிஐ சேர்த்துள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி நளினி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு அவசர வழக்காக நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

நளினி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், சாரதா நிதி நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கியதற்காக ₹1 கோடியே 40 லட்சம் பெற்றது தொடர்பாக நளினி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் நளினி சிதம்பரத்தை குற்றம் சாட்டப்பட்டவராகவோ, சாட்சியாகவோ சேர்க்கவில்லை. இந்தநிலையில் அவரை கைது செய்யக்கூடும் என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும்.

சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவும் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதால் அந்த வழக்கிலும் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.இதற்கு பதிலளித்த அமலாக்கப்பிரிவு வக்கீல் ஹேமா வாதிடும்போது, இதே வழக்கில் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்து.

எனவே, தான் கைது செய்யபடுவோம் என்று மனுதாரர் பயப்படத் தேவையில்லை என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், நளினி சிதம்பரத்துக்கு 4 வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் 2 வாரத்திற்குள் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து பிணைத் தொகையை செலுத்தி முன் ஜாமீனை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அதன் பின்னர் அவர் கொல்கத்தா நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saradha ,Nalini Chidambaram , Saradha financial institution fraud, Nalini Chidambaram, Munshiman
× RELATED சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில்...