×

புதுவை ஏர்போர்ட்டில் காவலர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது

புதுச்சேரி: புதுவை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பணியிலிருந்த ஐஆர்பிஎன் காவலர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  புதுவை, லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இங்கு இந்திய ரிசர்வ் பட்டாலியன் (ஐஆர்பிஎன்) போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஏனாம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா அமீர் குரோஷி (34). ஐஆர்பிஎன் காவலரான இவர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பணியில் ஈடுபடும்போது, பாதுகாப்பு பணிக்காக வைக்கப்பட்டுள்ள 303 எஸ்எல்ஆர் ரக  துப்பாக்கியில் தங்களது தோட்டாக்கள் (குண்டுகள்) நிரப்பி வேலை முடிந்ததும் அதை அவரவர் எடுத்துவிட்டு காலியாக விட்டு செல்வது வழக்கம்.

 அடுத்த பணிக்கு வரும் ஐஆர்பிஎன்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு அதை மாற்றி மாற்றி பயன்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று 11 மணியளவில் அப்துல்லா அமீர் 303 ரக துப்பாக்கியை நிற்க வைத்த  நிலையில் குண்டுகளை நிரப்பி துடைத்தபோது திடீரென ஒரு குண்டு பாய்ந்து அவரது வலது கை ஆள்காட்டி- கட்டை விரலை கிழித்தது. இதில் மயிரிழையில் தப்பிய அவரை சக காவலர்கள் மீட்டு உடனே ஜிப்மரில் சேர்த்தனர்.  தவறாக துப்பாக்கியில் கை பட்டதால் தோட்டா வெளியேறியதாக தெரிகிறது.மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அப்துல்லா அமீர் குரோஷி யிடம்  ஐஆர்பிஎன் துணை கமாண்டன்ட் மோதன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : airport ,Newport , New airport,gun fired,guard
× RELATED பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!