×

‘அரோகரா கோஷம் விண்ணதிர’ குன்றத்தில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பங்கேற்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரோகரா கோஷம் விண்ணதிர  பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். விழாக்களில் முக்கிய விழாவாக பங்குனி விழா நடைபெறும். பங்குனி திருவிழா மார்ச் 18ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்துடன் துவங்கிய விழா நாளையுடன் நிறைவடைகிறது. இந்நாட்களில் தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலையில் பூத வாகனம், அன்னவாகனம், தங்கமயில் வாகனம், பச்சை குதிரை வாகனம், தங்க குதிரை வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மார்ச் 30ம் தேதி பட்டாபிஷேகமும், 31ல் திருக்கல்யாணமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரையிலிருந்து மீனாட்சி பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று காலை 6.12 மணிக்கு கோயில் நிலையில் இருந்து அரோகரா கோஷத்துடன் தேர் கிளம்பியது. தேரில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக சுமார் 3 கி.மீ நீளமுள்ள கிரிவலப்பாதையை சுற்றி வந்து கோயில் நிலையை தேர் அடைந்தது. முன்னதாக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலப் பாதை வழியாக தேரை வடம்பிடித்து இழுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பங்குனி விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் பொறுப்பு ராமசாமி தலைமையில் கண்காணிப்பாளர் கர்ணன், மணிமாறன், புகழேந்தி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்….

The post ‘அரோகரா கோஷம் விண்ணதிர’ குன்றத்தில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Panguni ,Arokhara ,Gosham ,Vinnathira ,Hill ,Tiruparangunram ,Arokara Gosham Vinnathira Panguni festival procession ,Tiruparangunram Subramanya Swamy temple ,Arokara Gosham Vinnathira ,Panguni procession ,
× RELATED தனிக்கைகுழு ஆய்வு விராலிமலை முருகன்...