×

ஆதிதிராவிட நல பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கழிப்பிட வசதி: அடுத்த மாதத்தில் பணிகளை தொடங்க திட்டம்

சென்னை:ஆதிதிராவிட நல பள்ளிகள் கூடுதல் வகுப்பறை, கழிப்பிட வசதி, சுற்றுச்சுவர் அமைக்க ₹1.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை அடுத்த மாதத்தில் தொடங்கப்படும் என்று  ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1359 பள்ளிகள் மற்றும் 1,254 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் மற்றும் விடுதிகளில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற புகார்  எழுந்துள்ளது.  மேலும், ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் போதுமான இட வசதி, கழிப்பிட வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர்.

மேலும், அந்த பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் இரவு நேரங்களில்  சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக ஏராளமான புகார்கள் அரசுக்கு சென்றது. இதை தொடர்ந்து ஆதிதிராவிட பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பராமரிப்பு பணிகள்  மற்றும் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், கழிவறை கட்டிடம், விளையாட்டு மைதானம் மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை மேற்கொள்ள ₹1.49 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 10 ஆதிதிராவிட நல பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடம் பராமரிப்புற பார்ப்பு பணிக்கு ₹29.56 லட்சமும், வடகரை ஆண்கள்  மற்றும் பெண்கள் மேல்  நிலைபள்ளிகளில் ₹25 லட்சம் செலவில் விளையாட்டு மைதானம் மேம்படுத்துதல், மாணவியர் விடுதியில் ₹14 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் மேம்படுத்துதல், பாதுகாப்பு வளையம் அமைத்தல், முகப்பில் உள்ள வாயில் கேட்  மாற்றியமைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் சிறுநொலூர் ஆதிதிராவிட தொடக்க பள்ளிகளில் ₹33 லட்சம் செலவில் இரண்டு வகுப்பறை, கழுதூர் ஆதிதிராவிட நலப்பள்ளிக்கு ₹20 லட்சம் செலவில் கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் கட்டும், கிருஷ்ணகிரி  மாவட்டம் அத்திபள்ளம் உயர்நிலை பள்ளிக்கு ₹24 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு ₹24.11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆதிதிராவிட நலத்துறை சார்பில் விரைவில்  டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தம் நிறுவனம் மூலம், அடுத்த மாதம் முதல் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : classroom ,toilet facility ,Adi Dravida Health Schools , Additional classroom, toilet facility , Adi Dravida Health Schools
× RELATED போலீஸ் விசாரணை உப்பிலியபுரம்...