×

டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே 19,20ம் தேதி பாதுகாப்பு ஆணையர் ஆய்வு: மெட்ரோ ரயில் அதிகாரி தகவல்

சென்னை: டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை இடையிலான வழித்தடத்தில் வரும் 19,20ம் தேதிகளில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்திற்கான மெட்ரோ ரயில் முதலாவது வழித்தட பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. முதல் வழித்தட திட்டத்தின் இறுதியாக டிஎம்எஸ் - வண்ணாரபேட்டை வரையிலான 10 கி.மீ  சுரங்கபாதை வழித்தடத்தில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. தற்போது, ரயில் இஞ்சின் சோதனை ஓட்டம் மட்டுமே நடைபெற்று வருகிறது. குறிப்பாக, டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை இடையிலான வழித்தடத்தில்  ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், சென்னை சென்ட்ரல், உயர்நீதிமன்றம், மண்ணடி என 6 ரயில் நிலையங்கள் வர உள்ளன.

ஆயிரம் விளக்கு மற்றும் எல்.ஐ.சி ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அதுவும் முடிந்துள்ளது. இந்நிலையில், 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் பாதுகாப்பு ஆணையர் மனோகரன்  தலைமையிலான குழுக்கள் வருகை தந்து ஆய்வு செய்வார் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் எதிர்பார்த்திருந்தனர்.ஆனால், பாதுகாப்பு ஆணையர் வருகை தருவதில் தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக, பொங்கல் பண்டிகை முடிந்து 19 மற்றும் 20ம் தேதிகளில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளார். ஏற்கனவே, 10 கி.மீட்டர் தூரத்திலான இந்த  வழித்தடத்தில் தொடர் சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு ஆணையர் முன்னிலையில் மெட்ரோ ரயில் குறிப்பிட்ட வேகத்தில் இயக்கப்படும். பின்னர், அவர் இந்த வழித்தடம் முழுவதிலும் ஆய்வு மேற்கொள்வார். அவரின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த வழித்தடத்தில்  மெட்ரோ ரயில்கள் இந்த மாத இறுதியில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commissioner ,DMC-Watershed Security Commission , TMS - between ,colorpack, 19,20, Metro Rail
× RELATED நடிகர் எஸ்.வி.சேகர் தேசிய கொடியை அவமதித்ததாக கமிஷனர் அலுவலகத்தில் புகார்