×

தமிழகம் முழுவதும் 12 துணை கலெக்டர்கள் அதிரடி மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் 12 துணை கலெக்டர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு:கடலூர் பயிற்சியில் உள்ள துணை கலெக்டர் கணேஷ், கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் பயிற்சி துணை கலெக்டர் காயத்திரி சுப்பிரமணி, சென்னை நுகர்பொருள்  வாணிபக்கழகத்தின் மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் பயிற்சி துணை கலெக்டர் பரித்தி பார்க்கவி, சிவகங்கை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி  பயிற்சி துணை கலெக்டர் லாவண்யா, திருவண்ணாமலை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகப்பட்டிணம் பயிற்சி துணை கலெக்டர் சேக் மன்சூர், சென்னை நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் மேலாளராகவும், கடலூர் பயிற்சி துணை கலெக்டர் ஜெகதீஸ்வரன், விருதுநகர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  பிரிவுக்கும், திருநெல்வேலி பயிற்சி துணை கலெக்டர் லட்சுமி பிரியா, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராகவும், காஞ்சிபுரம் பயிற்சி துணை கலெக்டர் முத்துக்கருப்பன், திண்டுக்கல் மாவட்ட ஆதி திராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலப் பிரிவுக்கும், கன்னியாகுமரி பயிற்சி துணை கலெக்டர் சாய் வர்தினி, திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கும், மதுரை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலகர் சரவணன், மதுறை  தமிழ்நாடு வாணிபக்கழக மாவட்ட மேலாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாலதி, தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் சிறப்பு பறக்கும் படையின் துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கலெக்டரின் நேர்முக  உதவியாளர் கீதா, பூந்தமல்லி கலால் மேற்பார்வை அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu , Tamilnadu,Sub Collector,action
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...