×

ரவுடியை கைது செய்யாமல் இருக்க ரூ.5 லட்சம் கேட்ட ஏசி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

சென்னை: ரவுடியை கைது செய்யாமல் இருக்க, அவனது சகோதரனிடம், 5 லட்சம் ரூபாய், லஞ்சம் கேட்டு, ‘டீலிங்’ பேசிய, போலீஸ் உதவி கமிஷனர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் குரல் பரிசோதனை நடந்த திட்டமிட்டுள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், முத்தழகு. இவர், தமிழக காவல் துறையில், 1987ல், எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தார். பதவி உயர்வுக்கு பின், 2017, ஜூலை, 7 - 2018, மே 3 வரை, சென்னை, தேனாம்பேட்டை உதவி கமிஷனராக பணியாற்றி வந்தார். அவர், தேனாம்பேட்டையில் பணியாற்றியபோது, அந்தப் பகுதியில் வசித்து வரும், ராமநாதபுரம் சமஸ்தான வாரிசான, கார்த்திக் சேதுபதி என்பவரை கடத்தி, சொத்தை அபகரிக்க முயற்சி நடந்தது. இது தொடர்பான வழக்கை முத்தழகு விசாரித்து வந்தார். அப்போது கார்த்திக் சேதுபதியை, தீர்த்து கட்டும் திட்டத்துடன், தேனாம் பேட்டையில் உள்ள, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பதுங்கி இருந்த, ரவுடி, ‘ராக்கெட்’ ராஜா உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின், கூட்டாளி ஒருவனை கைது செய்யாமல் இருக்க, முத்தழகு, அவனது சகோதரனிடம், 5 லட்சம் ரூபாய் ‘டீலிங்’ பேசி, 3.50 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.

ரவுடியின் சகோதரனுடன், அவர், மொபைலில் டீலிங் பேசிய ஆடியோ, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, முத்தழகு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர், சென்னை ஆவடியில் உள்ள, சிறப்பு காவல் படையில், உதவிகமாண்டன்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் துறை ரீதியாக முத்தழகு மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், உள்துறை முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி எழுதியுள்ள கடிதத்தில், ‘முத்தழகிடம் குரல் பரிசோதனை நடத்தி, குற்றத்தை நிரூபித்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். இதனால், முத்தழகு மீது, வழக்கு பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், முத்தழகு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து குரல் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bribing ,Rauti , Rowdy, Vigilance Department, Case Registration
× RELATED தபால் ஓட்டுப்போட போலீசாருக்கு லஞ்சம்: அதிமுகவினர் இருவர் கைது