×

திருச்சுழி அருகே ஒரு வருடமாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் மக்கள் கடும் அவதி

திருச்சுழி, : திருச்சுழி அருகே ஒரு வருடமாக சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே புங்கமரத்துப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மறவர் பெருங்குடியிலிருந்து புங்கமரத்துபட்டிக்கு செல்லும் 3 கிலோ மீட்டர் தூர சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கடந்த வருடம் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் மூன்று பாலங்கள் மற்றும் புதிதாக சாலை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. சாலையில் செம்மண், ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு முதற்கட்ட பணி துவங்கியது. ஆனால் அடுத்தகட்ட பணி நடைபெறவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலை படுமோசமாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தை சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் தூத்துக்குடி, புதூர், விளாத்திகுளம் போன்ற ஊர்களுக்கு எங்கள் ஊர் வழியாக சென்றால் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம்தானம். மறவர் பெருங்குடியிலிருந்து புங்கமரத்துபட்டி வரை சாலை மோசமாக இருப்பதால் ரெட்டியப்பட்டி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி வழியாக சுமார் 70 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. பண மற்றும் காலவிரயம் ஏற்படுவதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே விரைவில் இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : place ,Tiruchi , Tiruchuzhi , road work,basic facility
× RELATED 3வது இடத்துக்கு சீமானுடன்தான் போட்டி...